இந்தியாவில் நடக்கும் உலக தொழில் முனைவோருக்கான மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா கலந்துகொள்கிறார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் குழு சார்பில் உலக தொழில் முனைவோருக்கான மாநாடு, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய தொழில் வாயப்புகளை பெறுவதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் அமெரிக்க பிரநிதிகள் குழுவும் கலந்து கொள்கிறது. இந்த குழுவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் தலைமை வகிக்கிறார். இத்தகவலை டிரம்ப் டிவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். இவாங்கா, பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இதில் கலந்துகொள்கிறார்.
‘இந்த மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தலைமையேற்று பங்கேற்க இருப்பதும் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதும் கவுரவமானது’ என்று இவாங்காவும் தெரிவித்துள்ளார்.