டெல்லி வந்துள்ள இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுமுறைப் பயணமாக இத்தாலி பிரதமர் பாலோ இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பாலோவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இந்திய பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலோ, இந்தியா, இத்தாலி இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என நம்புவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பாலோ, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். பாலோவுடன் அவரது மனைவி எமானுவேலா மரோ உள்ளிட்ட 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இந்தியா வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் இத்தாலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.