“அந்த மனிதரை கொன்றது, இந்த கரடி இல்லை”- சிறைபிடிக்கும் உத்தரவை நிறுத்திவைத்த நீதிமன்றம்!

'ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையில் இளைஞர் ஒருவரை தாக்கி கொன்ற கரடியை மலையில் இருந்து கீழ் இறக்க வேண்டும்' என்ற வழக்கை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
bear
bearptweb
Published on

17 வயதான ஜேஜே4 (jj4) என அழைக்கப்படும் பெண் கரடி ஒன்று கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி இத்தாலியை சேர்ந்த ஆண்ட்ரியா பாபி என்ற 26 வயதான இளைஞரை, ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள அவருடைய கிராமத்தில் தாக்கி கொன்றது. அந்த இளைஞர் மலைப்பாதையில் தனியாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) செய்துகொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்திருந்தாக சொல்லப்பட்டது. நவீன காலத்தில் கரடியால் கொல்லப்பட்ட முதல் மனிதராக ஆண்ட்ரியா பாபியே சொல்லப்படுகிறார்.

இச்சம்பவம் நடந்த பின்னர், அம்மாநில கவுன்சிலாக கருதப்படும் ரோம் நிர்வாக நீதிமன்ற நீதிபதிகள் “மக்களின் பொதுப் பாதுகாப்பிற்காக கரடியை சிறைப்பிடிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இதை ஏற்கும் வகையில், தாக்குதல் நடந்த ட்ரெண்டோ மாகாணத்தின் தலைவர் தரப்பில் அந்த கரடியை மலையில் இருந்து கீழ் இறக்க வேண்டும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கிடையே விலங்குகளுக்காக போராடும் குழுக்கள் கரடியை காப்பாற்ற போராடி வருகின்றன.

விலங்குகள் நல அமைப்பான லீல் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஆண்ட்ரியா பாபி உடலில் இருக்கும் பற்களின் தடயங்கள் ஆண் கரடியினுடையது. அது ஜேஜே 4 கரடியினுடையது அல்ல. மனிதர்களுக்கு எப்படி கை ரேகை முக்கியமோ அப்படித்தான் விலங்குகளின் பற்களும். ஜேஜே4 கரடி நிரபராதி” என தெரிவித்தது.

bear
bearptweb

இதனால் கரடியை கீழே இறக்கும் முடிவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அந்த உத்தரவை Lega Anti Vivisezione(LAV) எனப்படும் விலங்கு நல அமைப்பானது வரவேற்றுள்ளது. மேலும் கரடிக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதற்காக அந்த கரடியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளது. LAVயின் செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “ஜேஜே4 கரடியை ருமேனியாவில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதை தாமதப்படுத்துவதில் எந்த காரணமும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ட்ரெண்டோவில் (இத்தாலியை சேர்ந்த நகரம்) கரடிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது சுமார் 100 கரடிகள் நிறைந்த பகுதியான ட்ரெண்டோவில் வசிக்கும் மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கரடியால் பல சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com