இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவது என்பது ஹமாஸ் படைகளிடம் இஸ்ரேல் சரணடைய வேண்டும் என்பதற்கு விடுக்கப்படும் அழைப்பு. ஹமாஸ் படைகளிடம் இஸ்ரேல் ஒருபோதும் சரணடையாது. போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை” என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் 25ஆவது நாளாக தொடரும் நிலையில், காஸா பகுதியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இதுவரை 3,457குழந்தைகள் உட்பட 8,306 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹமாஸ் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.