இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 46 நாட்களை கடந்துள்ள நிலையில், 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த போர் நிறுத்தம் இன்று முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நாளைக்கு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. குறிப்பாக பாலஸ்தீன கைதிகளை இன்று விடுவிக்க முடியாது என்றுள்ளது இஸ்ரேல்.
இத்தனை நாள் போருக்கு பிறகு கத்தாரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைய கைதிகளில் 50 பேரை விடுவிப்பது, அதற்கு பதிலாக 150 கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனால், 4 நாள் போர் நிறுத்தம் இன்றே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், புதிய அறிக்கையை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில், “பாலஸ்தீன கைதிகளை இன்று விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. வெள்ளிக்கிழமைக்கு முன் எந்த பணையக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளது.
இதனால் இந்த தற்காலிக 4 நாட்கள் போர் நிறுத்தம் நாளை முதல் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் மனிதாபினான உதவிகள் போன்றவை கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், போர் நிறுத்த தாமதத்தால், பணையக்கைதிகளாக இருப்பவர்களின் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், தற்காலிக போர் நிறுத்ததை தொடர்ந்து, நிரந்தர தீர்வு தேவை என்பதே உலக மக்களின் எண்ணமாக இருக்கிறது.