யாஹியா சின்வார்
யாஹியா சின்வார்எக்ஸ் தளம்

ரூ.26 லட்சம் மதிப்புள்ள பை| ஹமாஸ் தலைவர் யாஹியாவின் இறுதிநிமிட காட்சிகள்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வார் குறித்த இறுதி நிமிடங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
Published on

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. எனினும், ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில்கூட, (அக்டோபர் 17) ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிக்க: ”நவ. 1 to19 ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம்" எச்சரிக்கைவிடுத்த காலிஸ்தான் தீவிரவாதி

யாஹியா சின்வார்
ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார் கொல்லப்பட்டார்... போர் முடிவுக்கு வருமா?

இந்த நிலையில், கொல்லப்பட்ட யாஹியா சின்வார் குறித்த இறுதி நிமிடங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவில் சுரங்கப்பாதை வழியாக அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தலையணை, மெத்தைகள், தொலைக்காட்சி, தண்ணீர் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது. இதில் அவரது மனைவி ஹெர்ம்ஸ் பை ஒன்றை எடுத்துச் செல்கிறார். அதன் மதிப்பு மட்டும் டாலர் 32,000 (இந்திய மதிப்பில் ரூ.26.90 லட்சம்) என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதையும் அறையும், காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இருக்கும் அவரது குடும்ப வீட்டின் கீழ் இருப்பதாகவும், அந்த அறையில் அனைத்து வசதிகளும் இருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் அது, “ஹமாஸில் பலரும் கஷ்டத்தை அனுபவித்தாலும், யாஹியா சின்வாரும் அவரது குடும்பத்தினரும் எந்தக் கவலையுமின்றி ஆடம்பரமாக வாழ்ந்தனர்” என அது தெரிவித்துள்ளது.

அடுத்து, யாஹியா சின்வார் இறப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட அவரின் இறுதி நிமிட வீடியோவையும் இஸ்ரேலிய படை வெளியிட்டுள்ளது. ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், காஸாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உள்ளே சோபாவில் யாஹியா சின்வார் அமர்ந்திருக்கிறார். மேலும், அவரது வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்த ட்ரோனை பார்க்கும் அவர் திடீரென அருகில் இருந்த ஒரு கம்பை தனது இடது கையால் தூக்கி அதன் மீது வீசுகிறார். இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: தினம் ஒருவருக்கு ரூ.8 கோடி.. ட்ரம்புக்கு ஆதரவாக புதிய அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!

யாஹியா சின்வார்
இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார்... யார் இவர்?

முன்னதாக, யாஹியா சின்வார் மரணம் தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்துவந்தது. அவர் இறக்கவில்லை என ஹமாஸ் தெரிவித்தது. ஆனால், சுடப்பட்ட மூவரில் சினாரும் இருக்கலாம் எனத் தெரிவித்தது. பின்னர், உடலின் பிரேதப் பரிசோதனை முடிவை வெளியிட்டு “அவர் தலையில் குண்டடிபட்டு இறந்தார்” என இஸ்ரேல் தெரிவித்தது. மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர், “டி.என்.ஏ. பரிசோதனை மூலம், இறந்தது சின்வர்தான்” என உறுதி செய்தது.

அதேபோல், இஸ்ரேல் தடயவியல் துறை, ”ஹமாஸ் தலைவர் சின்வர் உடல் பரிசோதனைக்கு கொண்டுவரும்போதே அவரது ஒரு விரல் துண்டிக்கப்பட்டு இருந்தது’ என்று தெரிவித்திருந்தது. மேலும் இஸ்ரேல் ராணுவம், ”அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகாக பலமுறை சின்வாரை நெருங்க முயற்சித்தும் அவர் தப்பினார். ஆனால், இறுதியாக கடந்த 17-ஆம் தேதி காஸாவில் அவரை அடையாளம் கண்டோம். இறுதியில் சின்வர் மூக்கை துடைக்க உபயோகித்த டிஷ்யூவை கைப்பற்றி, அதன் மூலம் இறந்தது சின்வர்தான் என உறுதி செய்தோம்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அடுத்தடுத்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதால் அவ்வமைப்புகளின் எதிர்காலம் என்ன ஆகும், போர் முடிவுக்கு வருமா என உலக அரசங்கில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே யாஹியா சின்வார் மரணத்திற்குப் பிறகு ஹமாஸின் அடுத்த தலைவராக யார் வரக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: கணவரின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. முடித்தபின்பு மனைவி வைத்த ட்விஸ்ட்.. உபியில் அரங்கேறிய சோகம்!

யாஹியா சின்வார்
வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com