இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை|நட்பு நாடுகளின் கோரிக்கை நிராகரிப்பு.. தொடர் தாக்குதலில் இஸ்ரேல்!

லெபனானில் தொடர் தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல், நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதேநேரத்தில், போர் தொடர்பாக லெபனானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் போர்
லெபனான் போர்எக்ஸ் தளம்
Published on

காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்.

இந்த நிலையில், இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, ஈரான் ஆதரவுகொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதில் 39 பேர் பலியானதாகவும், 3,000 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது, இஸ்ரேல் நடத்திய சதி என லெபனான் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. இதை, இஸ்ரேல் மறுக்கவும் இல்லை; அதேநேரத்தில் அதை உறுதிப்படுத்தவும் இல்லை.

இதற்கிடையே, ”இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும், இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம்” எனவும் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் தொடர் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. லெபனான் மீது இஸ்ரேல் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடத்திய தாக்குதல்களில் மட்டும் 51 போ் கொல்லப்பட்டதாகவும், 223 போ் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு நடத்திய தாக்குதலில் 550க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லெபனான் போர்
லெபனான் ஊடகவியலாளர் வீட்டில் பாய்ந்த இஸ்ரேலிய ஏவுகணை.. நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோதே தாக்குதல்!

இந்நிலையில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘லெபனானில் அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், லெபனானில் உள்ள இந்தியா்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் நடைபெற்று வரும் போரை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் விடுத்த அழைப்பை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. மேலும், இரு தரப்பினரும் 21 நாள்களுக்கு மோதலை நிறுத்திவைப்பதற்காக அமெரிக்காவும் பிரான்ஸும் கூட்டாக முன்வைத்த செயல்திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது.

லெபனான் போர்
காஸாவின் முக்கியப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com