பேஜர், பெஞ்சமின் நெதன்யாகு
பேஜர், பெஞ்சமின் நெதன்யாகுஎக்ஸ் தளம்

லெபனானில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்.. தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.
Published on

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்தப் போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. எனினும், ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, விரைவில் இஸ்ரேல் மற்றும் உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

காஸாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, தொழில்நுட்பத்தில் இஸ்ரேலின் மீறல்களைத் தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தன. இந்த பேஜர் கருவிகளுக்குள், வெடிக்கும் போர்டு கருவி ஒன்றை பொருத்தி, அதில் வெடிமருந்தை நிரப்பியிருந்ததாகவும், பேஜரில் கடவுச்சொல் (Code) வந்த உடன் வெடிக்கும் வகையிலான போர்டு கருவியை மொசாட் பொருத்தியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இதையும் படிக்க: நேற்று பேஜர்.. இன்று வாக்கி-டாக்கி.. லெபனானில் தொடரும் தாக்குதல்.. விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

பேஜர், பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!

அந்த வகையில், பேஜர்களைப் பயன்படுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன. அதேபோல், தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் அவர்கள் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன. மேலும், லெபனானுக்கு வெளியேயும் பேஜர்கள் வெடித்தன. மொத்தத்தில் நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்ததாகக் கூறப்பட்டது. இதற்கு மறுநாள் வாக்கிடாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 40 பேர் பலியாகினர், 3,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பதாக லெபனான் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு இஸ்ரேல் அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஎக்ஸ் தளம்

இந்த நிலையில், பேஜர் வெடித்த சம்பவத்திற்கு அனுமதி அளித்ததை இஸ்ரேல் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ஓமர் தோஸ்திரி, ”அமைச்சரவைக் கூட்டத்தில் பேஜர்கள் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததை இஸ்ரேல் பிரதமர் ஒப்புக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், “அந்த பேஜர்களை நாங்கள் தயாரிக்கவில்லை. ஐரோப்பாவில் உள்ள ஒருநாட்டில் எங்கள் பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பிஎசி என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்துள்ளது” என்று கோல்ட் அப்பலோ தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: லெபனான் | ஹிஸ்புல்லா அமைப்புக்கு குறி.. வெடித்துச் சிதறிய பேஜர்கள்.. 8 பேர் பலி.. 2,750 பேர் காயம்!

பேஜர், பெஞ்சமின் நெதன்யாகு
போரை நிறுத்த வாய்ப்பில்லை - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com