கடந்தவாரம், காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இறந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து, உயிருடன் இருந்த சிசுவை வெளியே எடுத்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சைக்குப்பிறகு அக்குழந்தையை காப்பாற்றி இருக்கின்றனர். இந்நிகழ்வானது அப்பகுதியில் பெரும் சோகத்திற்கிடையே சிறு சந்தோஷத்தை துளிர்க்கச் செய்துள்ளது.
ஈராக்கில் சமீபத்திய IDF (Israel Defense Forces) தாக்குதலில் 29 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்த வீடுகளைச் சேர்ந்தவர்கள். இறந்த 29 பேர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் கர்ப்பிணி பெண்ணான சப்ரீன் அல்-சகானிம் ஒருவர். இவர் தனது வயிற்றில் 30 வார சிசுவை சுமந்து வந்துள்ளார்.
IDF தாக்குதலுக்குப் பிறகு மீட்புக்குழுவினர், இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்த முற்படுகையில், கர்பிணிப் பெண்ணான இறந்த சப்ரீன் அல்-சகானின் வயிற்றில் இருந்த சிசு உயிருடன் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதைக் காப்பாற்ற நினைத்து, உடனடியாக அவசர சிகிச்சை மூலம் சிசுவை பிரித்தெடுத்தனர். இருப்பினும் குழந்தையானது வெறும் 1.4 கிராம் எடையிருந்து. அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றிவிட்டனர்.
குறைந்த எடையுடன் குழந்தை இருப்பதால், நான்கு வாரங்கள் வரையில் இன்குபேட்டரில் குழந்தை இருக்கவேண்டும் என்று கூறிய மருத்துவர்கள் ரஃபா மருத்துவமனையின் காப்பகத்தில் குழந்தையை வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் குத்துமதிப்பான கணக்கு
இஸ்ரேலின் கணக்குப்படி, அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல், 253 பேரைக் கடத்தினர்.
அதன் பிறகு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதலில் 34,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
காசா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 48 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 79 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.