குவியலாய் தங்கம், பணம்.. ரூ.4,203 கோடி மதிப்பு | ஹிஸ்புல்லா அமைப்பின் பதுங்குக்குழி கண்டுபிடிப்பு!

ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் முக்கிய கட்டமாக, பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவிலான நிதியைப் பதுக்கிவைத்துள்ள பதுங்குக் குழியை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட வரைபடம்
இஸ்ரேல் வெளியிட்ட வரைபடம்எக்ஸ் தளம்
Published on

ஹிஸ்புல்லாவின் நிதி நிறுவனத்தைக் குறிவைத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. எனினும், ”ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் முக்கிய கட்டமாக, பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவிலான நிதியைப் பதுக்கிவைத்துள்ள பதுங்குக் குழியை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.

பெய்ரூட்டில் அமைந்துள்ள மிக முக்கியமான அல்சஹல் என்ற மருத்துவமனைக்கு நேர்கீழாக இந்தப் பதுங்குக் குழி இருப்பதாகவும், இது ஹசன் நஸ்ரல்லாவின் ரகசிய பதுங்குக் குழியாகும் எனவும், இதில் ஏராளமான தங்கம், பணம் இருப்பதாகவும் இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். மேலும், அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,203 கோடி) எனவும், இந்த பணத்தை கொண்டு லெபனானை மறுகட்டமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அடேங்கப்பா! குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலியாய் இயங்கிய நீதிமன்றம்.. ஏமாந்த நபர்கள்.. ஷாக் ஆன போலீசார்!

இஸ்ரேல் வெளியிட்ட வரைபடம்
இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!

ஹிஸ்புல்லாவிற்கு  நிதி எங்கிருந்து வருகிறது?

முன்னதாக, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் அல்-கார்ட் அல்-ஹசன் (AQAH) ஆல் இயக்கப்படும் தளங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 இடங்களுக்கு இஸ்ரேல் குறிவைத்தன. அந்த தாக்குதலின்போது இந்த விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. AQAH ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அது ஹிஸ்புல்லாவின் நிதிப் பிரிவாகச் செயல்படுகிறது என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், இந்த நிறுவனம் ஹிஸ்புல்லாவின் இராணுவத் தேவைகளுக்கான நிதியை அளிப்பதாகவும், இது ஹிஸ்புல்லாவின் ஒரு சொத்து எனவும் அவை தெரிவித்துள்ளன. அல்-கார்ட் அல்-ஹசன் 1980களில் இருந்து லெபனானில் செயல்பட்டு வருவதாகவும், அது, லெபனான் குடிமக்களுக்கு தங்கநகைகளின் வைப்புத்தொகைக்கு ஈடாக கடன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த நிறுவனத்துக்கு லெபனான் வழியாக தங்கமும் சிரியா வழியாக ரொக்கமும் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் துருக்கியில் ஹிஸ்புல்லாவால் நடத்தப்படும் தொழிற்சாலைகள் குழு மூலமாக இந்த நிதி அளிக்கப்படுவதாகவும் அவைகள் தெரிவித்துள்ளன. இதனால் சமீபகாலங்களாக ஹிஸ்புல்லாவின் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்து வருகிறது. அந்த வகையில், இதன் முந்தைய தலைவரான ஷேக் சலா என்றும் அழைக்கப்படும் முகமது ஜாபர் க்சீர் சமீபத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கணக்குப்படி, இதுவரை 2000 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ - முழக்கம் எழுப்பிய ம.பி. நபர்.. நீதிமன்றம் விதித்த விநோத நிபந்தனை!

இஸ்ரேல் வெளியிட்ட வரைபடம்
வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!

காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது ஏன்?

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல், அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. அதன் விளைவாக ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

யாஹியா சின்வாரின் இறுதி நிமிட காட்சிகள்

சமீபத்தில்கூட, (அக்டோபர் 17) ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உறுதிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக சமீபத்தில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அந்த வீடியோவில் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் அவரது மனைவி மட்டும் கொண்டு சென்ற ரூ.26.90 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் அது பேசுபொருளானது. மற்றொரு வீடியோவில் அவர் ட்ரோன் தாக்குதலுக்கு ஆளாகி காயத்துடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த இரண்டு வீடியோக்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திஇருந்தது.

இதையும் படிக்க:காமன்வெல்த் 2026|பேட்மிண்டன், மல்யுத்தம் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் நீக்கம்! இந்தியாவுக்குப் பின்னடைவு

இஸ்ரேல் வெளியிட்ட வரைபடம்
ரூ.26 லட்சம் மதிப்புள்ள பை| ஹமாஸ் தலைவர் யாஹியாவின் இறுதிநிமிட காட்சிகள்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com