காஸா போர் | ஒரு மணி நேரத்தில் 120 ஹிஸ்புல்லா இலக்குகள் அழிப்பு.. இஸ்ரேல் ராணுவம் அதிரடி!

இஸ்ரேல் ராணுவம், காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்க நெட்வொர்க் ஒன்றையும் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காஸா எல்லை
காஸா எல்லைஎக்ஸ் தளம்
Published on

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்றுடன் ஓராண்டு கடந்த நிலையில், தொடர்ந்து அங்குப் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா புலனாய்வு அமைப்பின் தலைமையிடம் மற்றும் ஆயுத கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டன என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிக்கையில், "IAF (விமானப்படை) ஒரு பயங்கரமான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் தெற்கு லெபனானில் உள்ள 120க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை ஒரு மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்கி அழித்தது” எனத் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்க நெட்வொர்க் ஒன்றையும் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: காதலரிடம் ஆலோசனை.. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 13 உறவினர்களை விஷம் வைத்துக் கொன்ற பாகி. சிறுமி!

காஸா எல்லை
ஈரான் மீது போர்| ஜோ பைடன், ட்ரம்ப் ஒரேநேரத்தில் ஆதரவு! அமைதி காக்கும் இஸ்ரேல்.. அடுத்து என்ன?

முன்னதாக, இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளானது.

ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது. அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும்” என்று எச்சரித்துள்ளார். அதேநேரத்தில், “தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று ஈரான் தலைவர் அலி காமினி தெரிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேல் - காஸா இடையேயான போர் இன்றுடன் ஓர் ஆண்டைக் கடக்க இருப்பதால், அதற்குப் பழிவாங்கும் எண்ணத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரான், லெபனான் நாடுகள் இன்று (அக்.,07) இரவு விமானச் சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளன.

இதையும் படிக்க: மாலத்தீவுக்கு மீண்டும் கைகொடுத்த இந்தியா.. பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிந்த பெரிய ஒப்பந்தம்!

காஸா எல்லை
இஸ்ரேல் - ஹமாஸ் போர்|ஓராண்டுகள் நிறைவு; பலியான ஏராளமான உயிர்கள்.. முடிவை எட்டாமல் தொடரும் போர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com