இஸ்ரேல், ஹிஸ்புல்லா பரஸ்பரம் கடுமையான தாக்குதல்! மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் பதற்ற சூழல்!

இஸ்ரேலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் பதற்ற சூழல் எழுந்துள்து.
இஸ்ரேல் - லெபனான்
இஸ்ரேல் - லெபனான்முகநூல்
Published on

இஸ்ரேலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் பதற்ற சூழல் எழுந்துள்து.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினர் தெரிவித்தனர். தங்கள் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் முக்கிய தளபதியுமான ஃபவாத் ஷுகுர் கடந்த மாதம் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே இத்தாக்குதலை நடத்தியதாகவும் ஹிஸ்புல்லா தரப்பு விளக்கம் அளித்தது. தெற்கு லெபனான் பகுதியை இலக்காக வைத்து 100 போர் விமானங்களை கொண்டு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.

எதிர்த்தரப்பில் உள்ள ராக்கெட் லாஞ்ச்சர்களை அழிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் பொது மக்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தெரிவித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானை மையமாக வைத்து ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் முழு அளவிலான மோதல் வெடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒன்றரை லட்சம் ராக்கெட்டுகள் உள்ள நிலையில் அவை இஸ்ரேலின் எப்பகுதியையும் தாக்கும் வல்லமையை கொண்டவையாக உள்ளன. இஸ்ரேல், லெபனான் மோதல் வலுத்தால் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி அது சர்வதேச அளவில் மோசமான விளைகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. வளைகுடா பகுதியில் போர் நிறுத்தம் ஒன்றே பிரச்னைகளுக்கு தீர்வு என கூறுகிறார் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர்.

இஸ்ரேல் - லெபனான்
’எனிக்மா மிஷின்’ To ’ஐன்ஸ்டீன் கடிதம்’ - பால் ஆலன் சேகரித்த பொக்கிஷங்களை ஏலம் விடும் மைக்ரோசாப்ட்!

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் டெல் அவிவுக்கும் பெய்ரூட்டுக்கும் ஏர் பிரான்ஸ் மற்றும் லுப்தான்சா நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன. வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இதற்கு தீர்வு காண எகிப்தில் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சியாவது சமாதானத்திற்கு பாதை அமைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com