ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை

ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை
ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை
Published on

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய பத்திரிகையாளர் 40 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார்.

ஜப்பானைச் சேர்ந்த 44 வயது பத்திரிகையாளரான ஜம்பெய் யஹுதா சிரியாவில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு துருக்கி வழியாக சென்றார். அப்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் அவரை பிணை கைதியாக பிடித்து வைத்தனர். சுமார் 40 மாதங்கள் வரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கி அவதிப்பட்ட யஷுதா, அண்மையில் விடுவிக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் சிரியாவில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் தனது தாய்நாட்டுக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவே கடந்த 2004ஆம் ஆண்டு பாக்தாத் சென்றிருந்தபோதும் பயங்கரவாதிகளால் யஷுதா பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டார். அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அப்போது அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com