லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேற்கு லண்டனில், சுரங்க ரயில் போக்குவரத்து பல முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது. நேற்று பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த ரயில் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அவ்வியக்கத்தின் செய்தி நிறுவனம் அமாக், அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதுஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று லண்டன் போலீசார் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். பிரிட்டனில் இந்த ஆண்டில் நடைபெற்ற ஐந்தாவது தீவிரவாத தாக்குதல் இது ஆகும். இதனால் பிரிட்டன் மக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.