உலகில் 7 கண்டங்கள் மட்டுமே உள்ளது. அதாவது ஆசிய கண்டம், ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா. அண்டார்டிகா,ஆஸ்திரேலியா, உள்ளிட்ட ஏழு கண்டங்கள் உள்ளது. இந்த கண்டங்கள் மட்டுமே நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
இந்தநிலையில் தான் உலகின் 8வது கண்டத்தைய புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூசிலாந்து அருகே இந்த கண்டத்தை அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இதற்கு ”ஜீலந்தியா” (Zealandia) என்று பெயர் வைத்துள்ளனர். இதனுடைய பரப்பளவு 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்டதாகும்.
இந்த கண்டம் சிறு சிறு தீவுகளாக பிரிந்து உள்ளது. இந்த கண்டத்தை சுற்றி மர்மங்கள் நிறைந்திருப்பதாகவும், மனிதர்கள் யாரேனும் வாழ்ந்து வருகின்றார்களா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்து இருந்த கண்டம் 97 % நீருக்குள்ளும் 3% வெளியிலும் தெரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் தற்போது பசிபிக் கடலில் ஒரு கண்டம் கண்டிபிடிக்கப்பட்டது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இதனை கண்டம் என்று அழைக்கலாமா? வேண்டாமா? என்று விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கண்டம் விரைவில் அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.