ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களில் ஒருவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பொது வெளியில் அவர் பேசுவது, சைக்கிளிங் செல்வது போன்ற பல வீடியோக்கள், பதிவுகள் எப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது பைடனின் மற்றொரு பதிவும் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிறுக்கிறது.
அந்த வகையில் கடந்த நவம்பர் 20ம் தேதி 80வது வயதை கடந்த நிலையில், அடுத்த நாள் பைடன் தன்னுடைய அலுவலகத்தில் நின்றபடி எடுத்த போட்டோவில் அவரே எதிர்பார்க்காத ஒன்றுதான் இணையவாசிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது. அது என்னவெனில், அலுவலகத்தில் உள்ள நாற்காலியின் பின்னால் வெள்ளை நிற சட்டை அணிந்தபடி பைடன் நிற்க, அந்த சேரின் மேல் அவரது நீல நிற பிளேசரை மாட்டியிருக்கிறார்.
அந்த போட்டோவை எதேர்ச்சையாக பார்க்கும் போது சேரின் மீது போடப்பட்ட பிளேசரின் ஸ்லீவ் பைடனின் கால்கள் போன்று, அவர் நிற்பது எதோ உட்கார்ந்துக் கொண்டிருப்பது போல தோன்றும். ஆனால் ஒரு முறை கண்ணை சிமிட்டி அந்த போட்டோவை பார்த்தால்தான் அது அப்டிகல் இல்யூஷன் என புரிய வரும்.
பைடனின் இந்த ஆப்டிகல் இல்யூஷன் போட்டோவை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் அவரது ட்வீட் பதிவில் வரிசையாக ட்ரோல்களை பதிவிட்டிருக்கிறார்கள். அதில், “சேர்-க்கு பின்னாடி நிற்பதற்கு அதிலேயே உட்கார்ந்திருக்கலாமே” , “credenza போன்ற ஃபர்னிச்சர் மீது காலை வைத்து உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது. இது ஆப்டிக்ஸ்” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.