சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன அரசை ராணுவம் கைப்பற்றியதாக பரவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், சமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிறகு அங்குள்ள அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுவிட்டதாகவும், செப்டம்பர் 16 ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவம் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
சீன அரசை ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சிலர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாக கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்தும் ஒருபுறம் கேள்வி எழுப்பப்படுகிறது.