தனிநாடு தொடர்பாக ஈராக்கின் குர்துப் பிராந்தியத்தில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுவாக்கெடுப்பு தள்ளிவைக்கப்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும் நிலையில், குர்திப் பிராந்திய மக்களின் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பு காரணமாக புதிய சிக்கல் உருவாகலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அச்சம் தெரிவிக்கின்றன. இதனால் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை குர்துப் பிராந்திய அரசு தள்ளிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாம் உலகப் போர் முடிவடைந்தது முதல் தனிநாடு கோரிக்கையை குர்துப் இனத்தவர் எழுப்பி வந்திருக்கிறார்கள்.