ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரின் மொத்த பகுதியையும் மீட்டுள்ளதாக, ஈராக் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஈராக்கின் மொசூல் நகரை ஆக்கிரமித்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, ஈராக்-அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வந்த நிலையில், கடந்த 9 மாதங்களாக அங்கு போர் தீவிரமடைந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஈராக் கூட்டுப்படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்.
இருதரப்புக்கும் இடையே நீடித்த சண்டையின் முடிவில், மொசூல் நகரின் மொத்த பகுதியும் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஈராக் மற்றும் நட்பு நாடுகளின் படை வீரர்கள் மகிழ்ச்சியை குதுகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மொசூல் நகரம் மொத்தமாக மீட்கப்பட்டு விட்டதாக முதல்முறையாக செய்தியாளர்கள் மத்தியில் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி உலகிற்கு அறிவித்தார். இந்த வெற்றிக்கு ராணுவ வீரர்களின் தியாகமே காரணம் என்று கூறியுள்ள அவர், மொசூல் நகரை மறுகட்டமைக்கும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.