ஈரான் அணு குண்டின் தந்தை என்றழைக்கப்படும் மூத்த விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் மூத்த விஞ்ஞானியா திகழ்ந்தவர் மொஹ்சென் ஃபக்ரிஸாதே. இவர் ஈரான் அணு சக்தி திட்டத்தின் மிக முக்கியமான மூளையாக செயல்பட்டவர். இவர் தற்போது தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இறப்பை உறுதி செய்துள்ளது.
மொஹ்சென் ஃபக்ரிஸாதே ஈரான் அணுகுண்டின் தந்தை என்று வல்லுநர்களால் அழைக்கப்படுகிறார். 2010 முதல் 2012 வரை நான்கு ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் கொலைகளுக்கு பின்னால் இஸ்ரேல் நாட்டின் சதி உள்ளது என ஈரான் அரசு குற்றம்சாட்டி வந்தது. ஈரான் அணு சக்தி திட்டத்தை அமெரிக்காவும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தது.