ஈரானில் ’ஹிஜாப்’ அணிவதற்காக கட்டுப்பாடுகள் எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது.
மஹ்சா அமினி என்ற 22 பெண், முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார். காவல்துறை விசாரணை காவலில் இறந்தபோது, கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெவ்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களால் அனைவரின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் நிர்பந்தத்தில் உள்ளது ஈரான் அரசு.
இதனைத்தொடர்ந்து, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டும் வரும் முயற்சியில் இருக்கும் ஈரான் அரசு, போராட்டத்தில் ஈட்டுப்பட்டோர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஈரான் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் மஹ்மூத் அமிரி மோகதமும் உறுதிசெய்துள்ளார்.