ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஏர்பாட்களின் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஏர்பாட் ஆகியவை உலக அளவில் பெருமளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் போர், சீனாவில் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் நடப்பாண்டில் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை குறையும் என ஆப்பிள் நிறுவனம் கணித்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக, வரும் காலாண்டில் ஏற்கனவே நிர்ணயித்ததை விட ஐபோன் உற்பத்தியை 20 விழுக்காடு வரை குறைக்க ஆப்பிள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல, ஏர்பாட்களின் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.