இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி! பின்னணி இதுதான்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, சர்வதே குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
icc, நெதன்யாகு
icc, நெதன்யாகுஎக்ஸ் தளம்
Published on

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கலன்ட் ஆகிய இருவரும் 2023 அக்டோபர் 8 முதல் 2024 மே 20 வரை போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கலன்ட் ஆகியோருக்கு மனித விரோதக் போர் குற்றங்களுக்கான கைது உத்தரவை, இன்று (நவ.21) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்மஸ்ரி, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நிதன்யாகோ ஆகியோருக்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, கடந்த மே மாதமே கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தீயாய் பரவிய லஞ்ச குற்றச்சாட்டு செய்தி! கடும் வீழ்ச்சியை சந்தித்த அதானி குழும பங்குகள்! நடந்ததுஎன்ன?

icc, நெதன்யாகு
இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) என்றால் என்ன?

பாலஸ்தீன மக்களின் போர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் சமர்ப்பித்த விளக்கங்களையும் அறிக்கைகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், மருத்துவ உதவிகளைப் புறக்கணித்தது, குழந்தைகள், பெண்கள் உட்பட பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு. இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது 90களில் உருவானது. இது, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக தனிநபர்கள் மற்றும் தலைவர்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது. யூகோஸ்லாவியப் போர்கள் மற்றும் ருவாண்டா இனப்படுகொலைக்குப் பிறகு உலகத் தலைவர்கள் அதன் உருவாக்கத்திற்கு அதிகளவில் அழுத்தம் கொடுத்தனர்.

இந்த நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு மட்டுமே இந்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு பொருந்தும் என்பதால் சில நாடுகள் மட்டுமே இதில் கையெழுத்திட்டுள்ளன. ஐசிசியின் ரோம் சட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகள், வாய்ப்பு கிடைத்தால் அவர்களை (தவறு செய்தவர்கள்) கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதாவது, சர்வதேச நீதிமன்றத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாட்டிற்கு சென்றால் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும். அது நடக்க நீண்டகாலம் ஆகலாம். அவர்களுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்தாலும்கூட, சட்ட நடைமுறைகளை முடிக்க நீண்டகாலம் பிடிக்கும். அந்த வகையில், 124 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 34 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதேநேரத்தில், பாலஸ்தீனம் இதில் கையொப்பமிட்டிருப்பதால் போர்க்குற்றச் செயல்களை விசாரிக்க ஐசிசி உரிமையுள்ளது.

புதின்
புதின்எக்ஸ் தளம்

முன்னதாக, உக்ரைன் போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு, மார்ச் 17-ஆம் தேதியன்று பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொருட்படுத்தப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்திருந்தது.

இதையும் படிக்க:புதிய உச்சத்தை தொட்டது பிட்காயின் மதிப்பு! நவ.5-க்கு பிறகு கிடுகிடு உயர்வு.. பின்னணி காரணம் இதுதானா?

icc, நெதன்யாகு
’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com