இந்தோனிஷியாவின் சுலாவேசி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. 7.5 ரிக்டர் என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சுலாவேசி தீவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியுள்ளது. அதனால், சுலாவேசி தீவில் கடலில் இருந்து நீண்ட தொலைவிற்கு தண்ணீர் உள்ளே வந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் லொம்பாக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.