”எப்போ கல்யாணம்?” என்று அடிக்கடி கேட்ட பக்கத்துவீட்டு முதியவர்! கட்டையால் அடித்தே கொன்ற 45வயது நபர்!

இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நச்சரித்த பக்கத்து வீட்டு முதியவரை கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தோனேசியா
இந்தோனேசியாமுகநூல்
Published on

இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், ’ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என நச்சரித்த பக்கத்து வீட்டு முதியவரை கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுவாகவே திருமண வயது நெருங்கிவிட்டாலே, "எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் ?" என்ற ஒற்றை கேள்வியை பெரும்பாலானவர்கள் எதிர்க்கொண்டிருப்பர். இது போலதான், இந்தோனேசியாவிலும் , “எப்போது கல்யாணம்?” என்று தன்னை அடிக்கடி கேட்ட பக்க வீட்டு நபரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியது.

இந்தோனேஷியாவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய சிரேகர். இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர்தான் 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்று கூறப்படுகிறது.

அசிம் தனது அண்டை வீட்டுக்காரரான சிரேக்கை பார்க்கும்போதெல்லாம், ”எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேக் கடந்த ஜுலை 29 ஆம் தேதி அன்று மிகுந்த கோபத்துடன் அசிம் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

அவர்கள் திறக்காததால், மேலும், ஆத்திரமடைந்த சிரேக் வீட்டு கதவை உடைத்து, அசிமை மரக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். அசிம் தெருவில் ஓடி தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவரை பிடித்து மீண்டும் பலமாக தலையில் அடித்துள்ளார் சிரேக். இதனையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிரேக்கை தடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அசிமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று அசிமின் மனைவி போலீசாரிடத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சிரேக் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்தோனேசியா
கிடைத்தது அவ்ளோ தான்! மகளின் ஒற்றை கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை! கண்களை கலங்கவைக்கும் சம்பவம்!

இந்நிலையில், இவரை கொலை செய்ததற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் சிரேக்கிடம் விசாரித்ததில், ”திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு, என்னை கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதனால்தான், அவரை கொன்றேன். ” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், மற்றோரு வித்தியாசமான கொலை சம்பவமும் இதே இந்தோனேஷியாவில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அதில், கோழியிலிருந்து முட்டை முதலில் வந்ததா?.. முட்டையிலிருந்து கோழி முதலில் வந்ததா? என்ற கேள்வி இறுதியில் கொலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com