பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த காபிக்கடை உரிமையாளரான ஒருவர் 1966-ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான செய்தித் தாள்களை சேகரித்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா காந்தியின் செய்தி அப்போது தி இந்து ஆங்கில செய்தித்தாளில் வெளியாகி இருந்தது. கசங்கிப் போன அந்தச் செய்தித்தாளை பத்திரமாக சேகரித்து வைத்திருந்த திமோடி தற்போது அதனை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் சாமோனிக்ஸ் பள்ளத்தாக்கில் காபிக்கடை நடத்திவரும் இவர், இந்தச் செய்திதாள் மட்டுமல்லாது 1966 ஆம் ஆண்டு பல தேதிகளில் வெளியான ஆங்கில நாளிதழ்களையும் சேகரித்து வைத்துள்ளார். அதில் அப்போது இந்தியாவில் மிகவும் கவனம் ஈர்த்த பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
குறிப்பாக 1966-ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ஏர் இந்தியா போயிங் 707 விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 177 நபர்கள் உயிரிழந்தச் செய்தி. அதே போல 1950 களில் தி மலபார் பிரின்ஸஸ் என்ற விமானம் விபத்துக்குள்ளானச் செய்தி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி 101 பயணிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானச் செய்தி உள்ளிட்டவை அடங்கிய செய்தித்தாள்களை அவர் சேகரித்து வைத்துள்ளார். அவை தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.