அசாம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இன்டிகோ விமானம் திடீரென ஓடு பாதையில் இருந்து சறுக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் (Jorhat) விமான நிலையத்தில் இருந்து 98 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அருகே இருந்த மண்ணில் சறுக்கிச் சென்றது. இதனால், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோர்ஹாட் - கொல்கத்தா வழித்தடத்தில் இயக்கப்படும் இண்டிகோ 6E757 விமானத்தில் திடீர் “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அதன் ஒரு ஜோடி சக்கரங்கள் சேறும் சகதியுமாக இருந்த புல்வெளிக்குள் சிக்கியதாகவும், நல்வாய்ப்பாக விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை என்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.