வேலைக்கு வெளிநாடு செல்லும் இந்தியர்கள்.. உணவு இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் அவலம்...

குவைத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், நாடு விட்டு நாடு சென்று உணவு, இருப்பிடம் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் தவிப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள்
வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள்pt web
Published on

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் அதிகம் தொழிலாளர்களாக பணிபுரியும் நாடுகளில் ஒன்றாக குவைத் விளங்குகிறது. குவைத் நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 48 லட்சமாக உள்ளது. அதில் 16 லட்சம் பேர் குவைத் குடிமக்களும், 30 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினரும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 61 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்ட குவைத்தில், 75 சதவீத தொழிலாளர்கள் இந்தியர்கள். அங்கு10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் 64 வகையான வேலைகளை செய்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தொழிலாளர்கள் தாய் நாட்டில் பெரும் ஊதியத்தை விட வளைகுடா நாடுகளில் 3 மடங்கு சிறந்த ஊதியம் பெறுகிறார்கள் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. குவைத்தில் தச்சர்கள், வீட்டு தொழிலாளர்கள், ஹோட்டல் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற வேலைகளில் இந்தியர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். பொதுவாக குவைத் பணமான தினார் இந்திய மதிப்பை விட அதிக மதிப்பு இருப்பதால், அங்கு உள்ள இந்தியர்கள் குறைந்த சம்பளம் வாங்கினாலும் இந்திய மதிப்பில் அதிக தொகை பெறுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிமுறைகளின் படி, அங்கு உள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச பரிந்துரை ஊதியம் 300 முதல் 1,500 தினார் வரை நிர்ணயிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் முதல் 87,715 ரூபாய் வரை கிடைக்கிறது.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள்
குற்றால அருவியில் குளித்துவிட்டு ஊர் திரும்பிய போது சாலை விபத்துகள் - பெண் உட்பட 3 பேர் பலி

பாகுபாடு முதல் வேலை பளு வரை இந்தியத் தொழிலாளர்கள் குவைத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, குவைத்தின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதீத உழைப்பு, சிறிய விதி மீறல்களுக்காக நாடு கடத்தப்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்கள் சட்டப்பூர்வ பாதுகாப்பை அனுபவிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 2019 முதல் 2023 வரை மொத்தம் 48,095 தொழிலாளர்களின் புகார்களைப் பெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக குவைத்தில் உள்ள தொழிலாளர்களிடமிருந்து 23,020 புகார்கள் வந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் சவுதி, ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்பாடுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட குடியேற்ற மசோதாவை தயாரிக்குமாறு காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து வருடமாக குரல் எழுப்பி வருகிறது. வெளியுறவுத்துறை விவகாரம் என்பதால் இந்திய அரசால் மட்டுமே மசோதாக்களை நிறைவேற்றி, குறிப்பிடத்தக்க நாடுகளுக்கு தங்கள் நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தற்போது நடந்த விபத்திற்குப் பிறகு குவைத்தில் வாழும் இந்தியர்களின் நிலை நிலை வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குவைத்தில் இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் தங்குவதற்கு நெறிமுறைகளை வகுத்து வைத்திருக்கும் அரபு தேசம், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலாளர்களை கண்டும் காணாமலும் இருப்பது மனித நேயத்தை நசுக்கும் செயல் என புலம் பெயர் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு: ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com