காவல்துறை தாக்குதல்.. ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

ஜோர்டானில் தனியார் ஆடை நிறுவனம் ஊதியம் வழங்காததால், அங்கு பணியாற்றும் தமிழர்கள் உட்பட 100- க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜோர்டான் நாட்டில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பல மாதங்களாக தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஜோர்டானில் இந்தியர்கள் தவிப்பு
ஜோர்டானில் இந்தியர்கள் தவிப்பு

இதுதொடர்பாக, இந்திய தொழிலாளர்கள் தரப்பில் ஜோர்டான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டது. எனினும், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜோர்டான்
மகனைக் கொன்ற பெங்களூரு சிஇஓ: இதுபோல் பல வழக்குகள்.. ஆயினும் வெற்றிபெற்ற சுசனா சேத் கவனம்பெற்றது ஏன்?

இதில் தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப தங்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் உதவுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com