ஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்!

ஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்!

ஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்!
Published on

அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் ஐதராபாத் பொறியாளரைச் சுட்டுக்கொன்றவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஓலாதே பகுதியில், மென்பொறியாளராக பணியாற்றியவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32). ஐதராபாத்தை சேர்ந்தவர்.  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அதே பகுதியில் உள்ள மதுபான விடுதியில் நண்பர்களுடன் அமர்ந்து கூடைப்பந்தாட்ட போட்டியை டி.வியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், துப்பாக்கியால் அங்கிருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். ’நாட்டை விட்டு வெளியேறுங்கள்; என்று கூவியபடி சுட்டான். இதில் ஸ்ரீநிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் நண்பர் அலோக் மதாசனி காயமடைந்தார். 

அவரைச் சுட்டுக்கொன்றது அமெரிக்கா கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆதம் புரின்டன் (52) என தெரியவந்தது. அவரை கைது செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆதம் புரின்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை ஸ்ரீநிவாஸ் மனைவி சுனன்யா துமலா வரவேற்றுள்ளார்.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com