அமெரிக்கா: பள்ளி வளாகத்தில் இந்திய மாணவர் கொலை - கைது செய்யப்பட்டாரா குற்றவாளி?

அமெரிக்கா: பள்ளி வளாகத்தில் இந்திய மாணவர் கொலை - கைது செய்யப்பட்டாரா குற்றவாளி?
அமெரிக்கா: பள்ளி வளாகத்தில் இந்திய மாணவர் கொலை - கைது செய்யப்பட்டாரா குற்றவாளி?
Published on

அமெரிக்காவில் பர்டூ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பர்டூ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்தியானா பள்ளி வளாகத்தில் உள்ள அவரது தங்கும் அறையில் வைத்து கொல்லப்பட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து மாணவனின் ரூம்மேட் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நள்ளிரவு 12:44 மணியளவில் 911 என்ற காவல்துறை எண்ணிற்கு கொலைசெய்யப்பட்ட மாணவனின் ரூம்மேட் அழைத்து தகவல் தெரிவித்ததாக பள்ளியின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் டிம் டோட்டி தெரிவித்துள்ளார். ஆனால் தான் கொலைகுற்றத்தை ரூம்மேட் ஒப்புக்கொண்டாரா இல்லையா என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் சமூகத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிப்பகெனோ கவுண்டி கார்னர் அலுவலகம் இறந்துபோன மாணவன் குறித்து தெரிவித்துள்ளது. இறந்த மாணவனின் பெயர் வரும் மனிஷா சேதா(20) என்று கூறப்பட்டுள்ளது. இவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் ரூம்மேட் கைது செய்யப்பட்டிருந்தாலும், குற்றவாளியை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பர்டூ பல்கலைக்கழக தலைவர் மிட்ச் டேனியல்ஸ் இதுகுறித்து கூறுகையில், "எங்கள் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வு எங்களால் கற்பனை செய்யக்கூட முடியாத சோகமான நிகழ்வு. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயத்திலிருந்து அனுதாபங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். பர்டூவில் சுமார் 50,000 இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் இந்த செமஸ்டரில் பதிவு செய்துள்ளனர் என்று அதன் இணையதளம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com