இந்தியாவின் ரூ.200, ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுகள் நேபாளத்தில் செல்லாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுக்கள் வெகுநாட்களாக நேபாளத்தில் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, நேபாள வங்கிகள் அந்நாட்டில் இருந்த ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை இந்தியாவிடம் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டன.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.200, ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பிறகு, நேபாளத்திலும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் தற்போது நேபாள அரசு இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுகள் நேபாளாத்திற்குள் செல்லாது என அறிவித்துள்ளது.
மேலும் அந்த புதிய நோட்டுகளை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினால் இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் சுற்றுலா பயணிகளும், இங்கு வந்து பணிப்புரியும் நேபாள நாட்டு பணியாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.