அயர்லாந்தில் இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த இந்திய ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் டர்பன் நகரில் உள்ளது ’ரவிஸ் கிச்சன்’ என்ற இந்திய ஓட்டல். இந்திய உணவுக்காக பிரபலமான இந்த ஓட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் என்பவர் தன்னுடன் பணியாற்றும் இரண்டு பேர்களுடன் சென்றார். ஓட்டலில் உணவு பரிமாறுபவர்கள் யாரும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.
நீண்ட நேரமாக அவரது டேபிளுக்கு யாரும் வராததால், ‘ஏன் இந்தப் பக்கம் வந்து என்ன வேணும்னு கேட்கலை?’ என்று அருகில் நின்ற பெண் சர்வரிடம் கேட்டார். ‘நீங்கள் இந்தியர், உங்களுக்கு இங்கு உணவு வழங்குவதில்லை’ என்றார்.
இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அவர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தச் சம்பவம் கடந்த வருடம் நடந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதன்படி இந்தியருக்கு உணவு வழங்காத அந்த ஓட்டலுக்கு ரூ.3 ஆயிரம், யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை பட்நாகருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.