ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாத படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக். மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2018இல் புலிட்சர் விருது வென்றவர். சர்வதேச ஊடக நிறுவனமான ராய்டர்ஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றி வந்தவர். கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் தீவிரமாக இருந்த காலத்தில் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த புகைப்படங்கள் உலகிற்கு கொரோனா தொற்று சூழலை தெளிவாக புகைப்படங்கள் ஊடாக விளக்கியிருந்தது.
அவர் மறைந்தாலும் அவரது படங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும். கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கூட ட்விட்டர் தளத்தில் மயிரிழையில் உயிர் தப்பியதாக வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.