“பாதுகாப்பு இல்லை” - பிரிட்டனில் இந்திய வம்சாவளி கர்ப்பிணி மருத்துவர் போராட்டம்

“பாதுகாப்பு இல்லை” - பிரிட்டனில் இந்திய வம்சாவளி கர்ப்பிணி மருத்துவர் போராட்டம்
“பாதுகாப்பு இல்லை” - பிரிட்டனில் இந்திய வம்சாவளி கர்ப்பிணி மருத்துவர் போராட்டம்
Published on

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை எதிர்த்து இந்திய வம்சாவளி கர்ப்பிணி மருத்துவர் 10 டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளித்த தகவல்களின்படி. உலகளவில், 1, 65,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 596 என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16,060 என பதிவாகியுள்ள நிலையில், புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 5,850 என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தும் அபாயமும் நிலவுவதாக தெரிகிறது. இதே சூழல் நீடிக்கும் எனில் மருத்துவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் அல்லது நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் கைவிடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை எதிர்த்து இந்திய வம்சாவளி கர்ப்பிணி மருத்துவர் 10 டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார். 6 மாத கர்ப்பிணியான மருத்துவர் மீனல் விஜ், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கவும் என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் மாஸ்க் மற்றும் மருத்துவர் உடை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பிஎம்ஏ கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறுகையில், சுகாதாரப்பணியாளர்களுக்காக துருக்கியில் இருந்து வரவிருந்த உடைகள் தாமதமாகிவிட்டது. சுகாதார பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு மிகவும் அவசியம். நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பல மருத்துவர்கள் தங்களை ஏற்கெனவே ஆபத்தில் ஆழ்த்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்றால் இன்னும் அவர்களை ஆபத்து அல்லது மரணித்தில் தள்ளும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com