”84 மணிநேரம் வேலை என்று சொன்னதால் எனக்கு கொலை மிரட்டல்”-வைரல்ஆன அமெரிக்க CEO-ன் பதிவும் எதிர்ப்பும்!

”தங்களுடைய நிறுவனம் ஒர்க் லைஃப் பேலன்ஸ் எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையிலான சமநிலையை விரும்புவதில்லை” என இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தக்ஸ் குப்தா
தக்ஸ் குப்தாx page
Published on

உலகம் முழுவதும் வாரம் 6 நாள் வேலை குறித்து பேசப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், சில நாடுகளில் 6 நாள் வேலை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில்கூட இதுபற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. என்றாலும், அதற்கு கிளம்பி வருகிறது. பிரபல இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி, சமீபத்தில்கூட இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். ”வாரத்துக்கு 6 நாள் வேலை முக்கியம் என்ற நிலைப்பாட்டில், நான் உறுதியாக இருக்கிறேன். வாரம் 6 நாள் வேலை நாட்களாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். இதை என் இறுதிமூச்சு இருக்கும்வரை கடைபிடிப்பேன். ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தக்ஸ் குப்தா என்பவர் சமீபத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது, தற்போது எதிர்வினையாற்றியுள்ளது. அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”எங்களுடைய நிறுவனம் ஒர்க் லைஃப் பேலன்ஸ் எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையிலான சமநிலையை விரும்புவதில்லை” எனப் பதிவிட்டிருந்தார். அதாவது, “என்னுடைய நிறுவனத்தில் வேலைதேடி விண்ணப்பம் செய்தவர்களுக்கெல்லாம் அவர் தொடக்கத்திலேயே நிறுவனத்தில் காலை 9 மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு 11 மணிவரை வேலைசெய்ய வேண்டும். சில சமயங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாங்கள் முழு நேரம் வேலை செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல்|கடும் போட்டியில் இரண்டுகூட்டணி; மீண்டும் காத்திருக்கும் முதல்வர் பதவி பஞ்சாயத்து

தக்ஸ் குப்தா
“வாரம் 6 நாள் வேலையை சாகும்வரை தொடர்வேன்” - மீண்டும் வலியுறுத்திய இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி!

மேலும் அதில், “மேலும் எங்களுடைய நிறுவனத்தில் அதிக செயல்திறன் கொண்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அதிக வேலைப்பளுவும் இருக்கும். இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருந்தால், எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்வது தொடர்பாக உங்களை நேர்காணல் செய்கிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

அவருடைய இந்தப் பதிவு வைரலான நிலையில், பலரும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். ”நீங்கள் ஒரு மோசமான பணிச் சூழலையும் பணி கலாசாரத்தையும் ஊக்குவிக்கிறீர்கள்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “இந்த மனநிலை தவறானது” என்றும் ”சிலர் நீங்கள் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதற்கு நன்றி” என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ, ”இது நவீனகால அடிமைத்தனம்” என பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குப்தா மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், ”வாரத்திற்கு 84 மணி நேரம் வேலை என்ற அந்தப் பதிவு வெளியானதை அடுத்து தன்னுடைய இன்பாக்ஸில் 20 சதவீதம் கொலை மிரட்டல்களும் 80 சதவீதம் வேலைக்கான விண்ணப்பங்களையும் பெற்றுள்ளேன். நான் என்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய நிறுவனம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடக்க நிலையில் இப்படித்தான் இருக்கும். அதில் பணிபுரிபவர்கள் கடின உழைப்பை வழங்கித்தான் ஆக வேண்டும். நிறுவனம் ஓரளவு வளர்ச்சி அடைந்தபிறகு இந்த நிலை மாறும்” என அதில் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: உலகப்போர்? | ATACMS-ஐ பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி.. ரஷ்யா எதிர்ப்பு.. இனி என்ன நடக்கும்?

தக்ஸ் குப்தா
“பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளிகளை நாராயண மூர்த்தி காவு வாங்க வேண்டாம்” - சிபிஎம் செல்வா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com