இந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு

இந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு
இந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு
Published on

லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தின் போது அவமதிக்கப்பட்ட தேசியக் கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல் செய்த இந்திய பெண் பத்திரிகையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவின் சுதந்திர தின நாளன்று லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் ஈடுபட்டனர். காஷ்மீர் பிரச்னையை குறிப்பிட்டு நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் லண்டனின் இண்டியன் ஹை கமிஷன்  முன்பாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 

அப்போது சிலர் இந்திய தேசியக்கொடியை கிழித்தும், காலால் மிதித்தும்  தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைக் கண்ட இந்தியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஓடிச்சென்று இந்திய தேசியக்கொடியை பாகிஸ்தான் போராட்டக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து பேசிய பெண் பத்திரிகையாளர், பூணம் ஜோசி, நான் காவல்துறை கட்டுப்பாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தேன். தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதும், நான் போராட்டம் நடைபெறும் பாகிஸ்தானின் பக்கம் சென்று தரையில் கிடந்த ஒரு பகுதி தேசியக் கொடியை எடுத்தேன்.

அப்போது ஒரு போராட்டக்காரர் வைத்திருந்த மற்றொரு தேசியக் கொடியையும் பிடிங்கினேன். ஒரு பத்திரிகையாளராக நான் நிறைய போராட்டங்களை கண்டுள்ளேன். ஆனால் இவ்வளவு கீழ்த்தரமான அசிங்கமான போராட்டத்தை கண்டதில்லை என தெரிவித்துள்ளார். போராட்ட கூட்டத்துக்குள்ளேயே புகுந்து தேசியக் கொடியை பறிமுதல் செய்த பத்திரிகையாளர் பூணம் ஜோசியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com