சமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிரிட்டிஷ்வாழ் இந்தியர்

சமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிரிட்டிஷ்வாழ் இந்தியர்
சமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிரிட்டிஷ்வாழ் இந்தியர்
Published on

இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவகம் சமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பிரிட்டனின் பாத் நகரில் உள்ள தரம்வாய்ந்த உணவகங்களில் ஒன்று ’சாய் வாலா’. இது மூன்று முயற்சிகளுக்குப் பிறகு ஒரு சமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. சாய் வாலா பிரிட்டனில் உள்ள ஒரு இந்திய உணவகம். இதன் உரிமையாளர் இந்தியாவைப் பூர்விகமகாக் கொண்ட நிராக் காதெர். இவர் சமோசாவை விண்ணில் செலுத்தியது குறித்து யு.பி.ஐக்கு பேட்டியளித்துள்ளார்.

’’நான் ஒருமுறை நகைச்சுவைக்காக சமோசாவை விண்ணில் செலுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தேன். இந்த கொரோனா பொதுமுடக்கத்தில் அனைவருமே சோகத்தில் மூழ்கி கிடப்பதால் அவர்களை சற்று உற்சாகமாக்கலாம் என்று நினைத்தேன். எனவே என்னுடைய நகைச்சுவையை செயலாக்கும் முயற்சியில் இறங்கினேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த முயற்சிக்கு காதெர் ஹீலியம் பலூன்களை பயன்படுத்தியிருக்கிறார். முதல்முறை முயற்சியில் இறங்கியபோது சமோசாவை பலூனுடன் இணைக்கும்முன்பு கடைசி நிமிடத்தில் ஹீலியம் பலூன் கையிலிருந்து நழுவியிருக்கிறது. இரண்டாம் முறை போதிய ஹீலியம் இல்லாததால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

பலூனில் இணைத்த சமோசா விண்ணுக்கு செல்லவில்லை என்பதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும். இதை உறுதிசெய்துகொள்ளவே, அவர் சமோசாவை ஒரு பெட்டிக்குள் வைத்து அதனுடன், ஜிபிஎஸ் ட்ராக்கர் மற்றும் ஒரு கோப்ரோ கேமராவையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.

இரண்டாவது முறை திடீரென ஜிபிஎஸ் செயலிழந்துவிட்டாலும், அடுத்தநாள் மீண்டும் இணைப்பு கிடைத்திருக்கிறது. அப்போது போதிய ஹீலியம் இல்லாமல் சமோசா ஃப்ரான்ஸ் நாட்டில் விழுந்தது தெரியவந்திருக்கிறது. பிறகு சமூக வலைதளங்களில் காதெர் இதுகுறித்து பதிவிட்டிருக்கிறார். பிறகு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் மாதோன் என்பவர் பிகார்டே பகுதியில் சமோசா இருந்ததை கண்டிபிடித்திருக்கிறார்.

மூன்றாவது முறையாக காதெர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிகரமாக சமோசாவை விண்ணில் செலுத்தி அது வளிமண்டல அடுக்கை தாண்டிச் சென்ற வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருவதுடன், இவரின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com