கடந்த 2011ல் இந்தியாவைச் சேர்ந்த உமைர் அஜாஸ் என்ற மருத்துவர் அமெரிக்காவுக்கு பணி விசாவில் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள பல மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார்.
40 வயதான இவர் மீது கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவரது மனைவி ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் குழந்தைகள் உட்பட பல பெண்களை ஆடை இல்லாமலும், பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தியும் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் ஒரு பெண்டிரைவில் 13,000 விடியோக்களை வைத்திருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். அத்தோடு அது சம்பந்தமான பெண்டிரைவையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அவர் அமெரிக்கப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
போலீசார் விசாரனையில் அவர் பணிபுரிந்த மருத்துவமனைகளில் கழிவறை, செவிலியர்கள் உடை மாற்றும் அறை, நோயாளிகளின் அறை என பல்வேறு இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களை வைத்தும் தன்னிடம் வரும் நோயாளிகள் மயக்கத்தில் இருக்கும்போதும் அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அளவு இன்னும் தெரியவில்லை என்றும், விசாரணை முடிய பல மாதங்கள் ஆகலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல மடங்காக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது இவர் ஓக்லாந்து கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால், மக்கள் தொடர்பு கொள்வதற்காக காவல்துறை ஒரு மின்னஞ்சல் முகவரியையும் வழங்கியுள்ளது. இதில் சந்தேகம் இருப்பவர்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
13,000 வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் மட்டுமல்லாது அவரிடம் இருந்து ஐ போன், 5 எக்ஷ்டேர்னல் டிவைஸ்களும் கைப்பற்றப்பட்டுள்ளான. இவைகளில் இன்னும் அதிகமான வீடியோக்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.