பிரபல இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்களை பெற அந்நாட்டு அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்களுக்கு மேல் அதானி லஞ்சமாக கொடுக்க சம்மதித்தார் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
எனினும் தனது இந்த தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து அவர்களிடம் இருந்து அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது, அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
எனினும் இக்குற்றச்சாட்டு குறித்து அதானி குழும நிறுவனங்களோ அல்லது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகமோ விளக்கம் எதையும் தரவில்லை. இந்தியாவின் 2ஆவது பெரிய பணக்காராரன கவுதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 22 ஆவது இடத்தில் உள்ளார்.