டேஸ்ட் அட்லஸின் உணவு தரவரிசை... இந்திய சட்னிக்கு 42-வது இடம்

குரோஷியாவை தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற டேஸ்ட் அட்லஸ், உணவு தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
உணவு பட்டியல்
உணவு பட்டியல்கூகுள்
Published on

டேஸ்ட் அட்லஸ் பட்டியலின்படி சிறந்த உணவு பட்டியலில் இந்தியாவுக்கு 11-வது இடம்

குரோஷியாவை தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற டேஸ்ட் அட்லஸ், உணவு தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் உலகத்தில் சிறந்த 100 சிறந்த உணவுகள் பட்டியலில் இந்தியாவின் சட்னி முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளது.

உலக சுவை பட்டியலில் இடம் பெற்ற இந்திய சட்னிகள்...

இந்தியர்களின் காலை உணவு பெரும்பாலும் இட்லி, தோசைதான். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார்தான். இதில் சட்னி செய்வது மிகவும் சுலபம் என்பதால் பெரும்பாலும் சட்னியே முதல் இடத்தை பிடித்து இருக்கும். சட்னியில் பலவகை செய்வதில் தென் இந்தியர்கள் கைதேர்ந்தவர்கள். இதில் தேங்காய் சட்னி, தக்காளி மற்றும் புதினா சட்னி அனைவருக்கும் அல்டிமேட்.

டேஸ்ட் அட்லஸின் கருத்து கணிப்பின்படி உலகில் இந்திய சட்னி வகைகள் 42-வது இடத்தை பெற்றுள்ளது. இதில் கொத்தமல்லி சட்னி 47-வது இடத்தையும் மாம்பழ சட்னி 50-வது இடத்தையும் பிடித்துள்ளன.

முதலிடத்தை லெபனானின் பூண்டு பேஸ்ட் பெற்றுள்ளது . இந்த பூண்டு பேஸ்டானது பூண்டு, கனோலா எண்ணெய் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைசாறு மற்றும் உப்பு கலந்து செய்யப்படும் ஒருவிட பேஸ்ட் ஆகும். இவை அசைவ உணவுகளில் பயன்படுத்த படுகிறது.

லெபனானின் பூண்டு பேஸ்ட் (toum)
லெபனானின் பூண்டு பேஸ்ட் (toum)

இரண்டாவது இடத்தை அஜிகிரியோலோ அல்லது சல்சாடி அட்ஜி என்று சொல்லப்படும் ஒரு சாஸ் பிடித்திருக்கிறது. இது மிளகாய், எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பெருவியன் சல்சா ஆகும். இதுவும் அசைவ உணவுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.

aji criollo
aji criollo

கீழே மாம்பழ உணவு தரவரிசை பட்டியல். இதில் இந்தியா முதல் மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com