அமெரிக்கவாழ் இந்தியர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்: டொனால்ட் டிரம்ப்
Published on

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்திய  சமூகம்  தமக்கு வாக்களிக்கும் என்று  நம்புவதாக அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"எங்களுக்கு இந்தியாவிலிருந்து பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர்  நரேந்திர மோடியிடமிருந்தும்  எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. கடந்த ஆண்டு டெக்சாஸில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்வு ஒரு அருமையான நிகழ்வு,  அது மறக்கமுடியாதது" என்று கூறினார்.

மேலும் “பிரதமர் மோடி என்னுடைய ஒரு நல்ல நண்பர், அவர் ஒரு சிறப்பான வேலையைச் செய்கிறார், இது ஒன்றும் எளிதானது அல்ல, ஆனால் அவர் அந்த சிறப்பான  பணியைச் செய்கிறார். நீங்கள் ஒரு சிறந்த தலைவரைப் பெற்றுள்ளீர்கள், உங்களுக்கு ஒரு சிறந்த மனிதர் கிடைத்துள்ளார் "என்று டிரம்ப்  கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில்  மெலனியா டிரம்புடன் இந்தியாவுக்கு சென்ற  தனது இரண்டு நாள்  பயணம் குறித்து  பேசிய அவர்," எங்களுக்கு  அது வியக்கத்தக்க நேரமாக இருந்தது,  அந்த மக்கள்  எவ்வளவு வியக்கத்தக்கவர்கள் என்று நாங்கள் கண்டோம். இதுபோன்ற ஒரு வியப்பான இடம் மற்றும் நாடு இந்தியா, அது நிச்சயமாக பெரியது. " என்றார்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தீவிர பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com