2025-ல் வங்கதேசத்தில் பொருளாதாரத் தடை.. ட்ரம்பிடம் கோரிக்கை வைக்க முடிவு.. எதற்கு தெரியுமா?

“வங்கதேச ஆட்சிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து அடுத்த ஆண்டு ட்ரம்ப் புதிய நிர்வாகத்திடம் இந்திய அமெரிக்கர்கள் முயற்சி செய்கிறார்கள்” என இந்திய அமெரிக்க மருத்துவர் டாக்டர் பாரத் பராய் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியை அறியலாம்...
வங்கதேச வன்முறை, ட்ரம்ப்
வங்கதேச வன்முறை, ட்ரம்ப்எக்ஸ் தளம்
Published on

வங்கதேசத்தில் புதிய அரசு!

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர், அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். என்றாலும், அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் பேசுபொருளானது.

சிறுபான்மையினர்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ட்ரம்ப் கண்டனம்

இந்த நிலையில், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்ப், கடுமையாக கண்டித்துள்ளார்.

அப்போது அவர், “வங்காளதேசத்தில் கும்பலால் தாக்கப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அரசாக இருந்திருந்தால், இது ஒருபோதும் நடந்திருக்காது. கமலா ஹாரிஸும் ஜோ பைடனும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களையும் அமெரிக்காவையும் புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரை நமது தெற்கு எல்லை வரை பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்கி அமைதியைக் கொண்டுவருவோம். எனது ஆட்சியில் இந்து அமெரிக்கர்களையும் பாதுகாப்போம். அவர்களுடைய சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: IND Vs SA | ஒரே ஆண்டு.. ஒரே போட்டி.. இந்திய அணி படைத்த மகத்தான 10 சாதனைகள்!

வங்கதேச வன்முறை, ட்ரம்ப்
வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பொருளாதாரத் தடை

இந்த கண்டிப்பிற்குப் பிறகு அடுத்த சில நாட்களில், வங்கதேசத்தில் டாக்கா மற்றும் பிற நகரங்களில் அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப்பின் உறுதியான வெற்றியைக் கொண்டாடக் கூடியிருந்த பல குழுக்களுக்கு எதிராக வங்கதேச படையினரால் அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டோரைப் போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில், “வங்கதேச ஆட்சிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து அடுத்த ஆண்டு ட்ரம்ப் புதிய நிர்வாகத்திடம் இந்திய அமெரிக்கர்கள் முயற்சி செய்கிறார்கள்” என இந்திய அமெரிக்க மருத்துவர் டாக்டர் பாரத் பராய் தற்போது தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ட்ரம்ப்பின் அறிக்கைக்குப் பிறகு, பாரத் பராய் இதை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனின் அமெரிக்க கேபிட்டலில் ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும். அப்படி இந்த ஆண்டு நடந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து இந்திய அமெரிக்கர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேட்டியளித்த பார்த் பராய், “இந்து சிறுபான்மையினரை துன்புறுத்தும் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் செயல்படுவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முகமது யூனுஸ், டொனால்டு ட்ரம்ப்
முகமது யூனுஸ், டொனால்டு ட்ரம்ப்

மேலும் அவர், “முஹம்மது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷின் காபந்து அரசாங்கம், இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொம்மை ஆகும். உண்மையில், அங்கு இராணுவம்தான் நாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இத்தகைய அழுத்தம், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை துன்புறுத்துவதை நிறுத்த வங்கதேசத்தில் விரைவில் ஒரு வழி பிறக்கும்.

ஒருவேளை, வங்கதேசத்தில் இந்துக்களுக்கான பிரச்னை சரியாகவில்லை என்றால், இந்து அமெரிக்கர்களாகிய நாங்கள் அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைப்போம். இதற்காக, சமூக உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். ட்ரம்ப் ஒரு துணிச்சலான நபர். நிலைமை மேம்படவில்லை என்றால் பொருளாதாரத் தடைகளை அவர் கருத்தில் கொள்வார். இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தினால், இந்தியாவும் அவர்கள்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கை: தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றி சாதித்த ஆளும்கட்சி.. சாத்தியமானது எப்படி? வைகோ கடும் கண்டனம்

வங்கதேச வன்முறை, ட்ரம்ப்
வங்கதேசம்|"நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது"- இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்த யூனுஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com