பைடன் அரசின் 50 நாள்களில் 55 உயர் பதவிகள்... அமெரிக்காவை 'ஆளும்' இந்தியர்கள்!

பைடன் அரசின் 50 நாள்களில் 55 உயர் பதவிகள்... அமெரிக்காவை 'ஆளும்' இந்தியர்கள்!
பைடன் அரசின் 50 நாள்களில் 55 உயர் பதவிகள்... அமெரிக்காவை 'ஆளும்' இந்தியர்கள்!
Published on

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் களமிறக்கப்பட்டது. நாசாவின் மைல்கல்லில் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கல வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன். இந்த நிலையில், நாசாவின் சாதனையை பாராட்டி பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

நாசா விஞ்ஞானிகளுடன் மெய்நிகர் உரையாடலில் கலந்துரையாடிய அவர், "இது பெரிய விஷயம். இந்த வெற்றி அமெரிக்கர்களின் உதவேகத்தை எடுத்துக்காட்டுகிறது" என்றவர், இந்திய - அமெரிக்கர்கள் குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.

"இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை திறம்பட வழிநடத்துகிறார்கள். நீங்கள் (ஸ்வாதி மோகன்), எனது துணை அதிபர் (கமலா ஹாரிஸ்), எனது எழுத்தாளர் (வினய் ரெட்டி) உட்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அதிபர் பைடன்.

இதற்கிடையே, அதிபர் பைடன் தான் பதவியேற்ற 50 நாள்களில் 55 இந்திய - அமெரிக்கர்களை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார். தனது உரையை எழுதி தரும் உரை எழுத்தாளர் முதல் நாசா வரை அரசாங்கத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரிவிற்கும் தனது நிர்வாகத்தின் முக்கியத் தலைமை பதவிகளுக்கு 55 இந்திய - அமெரிக்கர்களை நியமித்துள்ளார். அதாவது, துணை அதிபர் கமலா ஹாரிஸை சேர்க்காமல் 55 இந்தியர்கள் பைடன் நிர்வாகத்தில் பதவி பெற்றுள்ளனர்.

அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள்; அவர்களில் கணிசமானவர்கள் வெள்ளை மாளிகையில் பணிபுரிகின்றனர். ஒபாமா - பைடன் நிர்வாகம் (2009 - 2017) அதிக எண்ணிக்கையிலான இந்திய - அமெரிக்கர்களை நியமித்த பெருமையை கொண்டுள்ளது. இந்திய - அமெரிக்க பெண்கள் பைடன் நிர்வாகத்தில் ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளனர்.

பைடனால் நியமிக்கப்பட்ட இந்திய - அமெரிக்க பெண்களின் குறிப்பிடத்தக்கவர்கள்: உஸ்ரா ஜியா, சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், வெளியுறவுத்துறை கீழ் மாநில செயலாளர்; மாலா அடிகா: டாக்டர் ஜில் பைடனுக்கு கொள்கை இயக்குநர்; ஆயிஷா ஷா: வெள்ளை மாளிகை அலுவலகத்தின் டிஜிட்டல் வியூகத்தின் கூட்டு மேலாளர்; அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சில் (என்.இ.சி) துணை இயக்குநர் சமீரா பாசிலி; சுமோனா குஹா: வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்காசியாவின் மூத்த இயக்குநர்; சப்ரினா சிங்: துணை பத்திரிகை செயலாளர், துணை ஜனாதிபதி வெள்ளை மாளிகை.

இவர்கள் உட்பட இன்னும் பல பெண்கள், பைடன் நிர்வாகத்தின் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். இது இந்தியர்கள் பெருமைப்படும் நிகழ்வாக மாறி இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com