ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு.
இந்தியா வாக்களிப்பு
இந்தியா வாக்களிப்பு புதிய தலைமுறை
Published on

கிழக்கு ஜெருசலேம் மற்றும் கோலன் குன்றுகள் போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய
குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

ஐ.நா.
ஐ.நா.புதிய தலைமுறை

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்து, கடந்த வியாழன் அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 145 நாடுகள் வாக்களித்தன.

7 நாடுகள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐ.நா. தீர்மானத்தில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தியா வாக்களிப்பு
அவதிப்படும் 50,000 கர்ப்பிணிகள்.. 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி..! உறைய வைக்கும் உண்மைகள்!

காஸா மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்தம் குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com