தலிபான்களுடன் இந்தியா முதன்முறையாகப் பேச்சுவார்த்தை!

தலிபான்களுடன் இந்தியா முதன்முறையாகப் பேச்சுவார்த்தை!
தலிபான்களுடன் இந்தியா முதன்முறையாகப் பேச்சுவார்த்தை!
Published on

தலிபான் தீவிரவாத இயக்கத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் முதன் முறையாக, அதிகாரபூர்வமற்ற முறையில் இந்தியா கலந்துகொள்கி றது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தற்கொலைத்தாக்குதல்களும் அங்கு அடிக்கடி நடந்துவருகின்றன. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களோடு அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் தினமும்  நடக்கின்றன.

இந்நிலையில் அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக ரஷ்யா, தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா முயன்றது. அப்போது ஆப்கானிஸ்தான் அரசு பின்வாங்கியதால் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வில்லை. இதையடுத்து இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா அதிகாரபூர்வ மற்ற முறையில் கலந்துகொள் கிறது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும்போது, ’ஆப்கானிஸ்தானில் அமைதி, சாமாதானம், ஒற்றுமை மற்றும் ஸ்த்திரத் தன்மையை காக்க இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரபூர்வமற்ற நிலையில் கலந்து கொள்கிறது’ என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ரஷ்ய வெளியுறவுத் துறை அழைத்திருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com