இந்தியா - இலங்கை இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக இந்தியா சார்பாக மேலும் 209 அவசர ஊர்திகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பான உடன்படிக்கையில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்தியாவிற்கான இலங்கை தூதர் தரஞ்ஜித் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர். கொழும்பில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை சென்ற போது 108 அவசர ஊர்தி சேவையை அமல்படுத்த உறுதி அளித்தார். அதன்படி இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு 50 கோடி ரூபாய் மதிப்பில் 88 அவசர ஊர்வதிகள கடந்த 2016 ஜூலையில் வழங்கப்பட்டு இலங்கையின் மேற்கு, தெற்கு பகுதிகளில் அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.