உலக நாடுகள் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய இந்தியாவின் தலைமை மிகவும் முக்கியமானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாழ்க்கை இயக்கம் என்ற பெயரில் சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் காணொளி மூலம் பிரதமர் மோடியுடன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸூம் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை காப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்தரங்கிற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாக கூறினார். உலகளாவிய காலநிலை மாற்றப் பிரச்னைக்கான தீர்வை எட்டுவதற்கு இந்தியாவின் தலைமை மிகவும் முக்கியமானது என பில்கேட்ஸ் தெரிவித்தார். பசுமை இல்ல வாயுக்களை உலகில் இருந்து அகற்ற தொழில்நுட்பமும், தனியார் மற்றும் பொதுத்துறையின் பங்களிப்பும் அவசியம் என்றும் பில்கேட்ஸ் வலியுறுத்தினார்.