பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.7,500 கோடி கடன் உதவி

பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.7,500 கோடி கடன் உதவி
பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.7,500 கோடி கடன் உதவி
Published on

இலங்கைக்கு இந்திய மதிப்பில் 7500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியா கடனுதவி. கடந்த மாதம் இலங்கைக்கு இந்தியா 3750 கோடி ரூபாய் கடனுதவி வழங்கியிருந்தது. 

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லி வந்துள்ள நிலையில் கடனுதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்து. கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உக்ரைன் போர் சூழல் அச்சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் உதவியை நாடி அந்நாட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடியை இலங்கை நிதியமைச்சர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது கூடுதலாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவியை பசில் ராஜபக்ச கேட்டதாக தகவல் வெளியானது. இது தவிர மேலும் சில நிதியுதவிகளையும் அந்நாடு கோரியுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த உதவிகளை விடுவிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து இருந்தது. இந்தியா ஏற்னவே கடந்த மாதம் இலங்கைக்கு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொகையை கொண்டு இந்தியாவிடம் இலங்கை எரிபொருட்களை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு குறைந்துவிட்ட நிலையில் உணவு, எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க இயலாத நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா அளிக்க உள்ள கடன் தொகையை கொண்டு உணவு, எரிபொருள், மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com