வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போதும், விபத்துக்களின் போதும் உதவி செய்வதில் இந்தியா 81-வது இடத்தை பிடித்துள்ளது.
இதுதொடர்பாக லண்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வின் தகவலில், இந்தியாவில் உதவும் மனப்பான்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, கடந்த ஆண்டு 91-வது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பு ஆண்டில் 81-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது மியான்மர் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்தியாவின் வடமாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மோசமான நிலை அடைந்துள்ள நிலையில், உதவும் மனப்பான்மையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.